செய்திகள்

ஒரு ஓவரில் 5 சிக்ஸர்: பெரேராவின் பந்துவீச்சைப் புரட்டி எடுத்த நியூஸிலாந்தின் ஜிம்மி நீஷம்!

34 ரன்கள் கொண்ட ஓவராக அமைந்தது அது. இதனால் 350 ரன்கள் கிடைக்கும் என்கிற நிலையில்...

எழில்

நியூஸிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நியூஸிலாந்தின் மெளண்ட் மெளன்கனியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்துள்ளது. 

தொடக்க வீரர் கப்தில் 139 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் குவித்தார். கேப்டன் வில்லியம்சன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏழாவதாகக் களமிறங்கிய ஜிம்மி நீஷம் 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்ததுதான் இலங்கை அணியை மேலும் நோகடித்துள்ளது. 49-வது ஓவரை வீசிய திசாரா பெரேரா பந்துவீச்சு அவருக்கு லட்டு போல அமைந்தது. அந்த ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். முதல் நான்கு பந்துகளில் நீஷம் சிக்ஸர் அடிக்க 5-வது பந்தை நோ பாலாக வீசினார் பெரேரா. இதனால் அடுத்தப் பந்தை சிக்ஸுக்கு அனுப்பினார். கடைசிப் பந்தில் நீஷமால் சிக்ஸ் அடிக்கமுடியாமல் போனது. 34 ரன்கள் கொண்ட ஓவராக அமைந்தது அது. இதனால் 350 ரன்கள் கிடைக்கும் என்கிற நிலையில் இருந்த நியூஸிலாந்து அணி கடைசியில் 371 ரன்கள் குவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்த ஆஷியானா ஹவுசிங்!

இரவில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வந்தான் எனை வென்றான்... தர்ஷு சுந்தரம்!

பண்டைய இந்தியர்கள் கலாசாரத்தைப் பரப்பினர், மதம் மாறவில்லை: மோகன் பாகவத்

ஆண்பாவம் பொல்லாதது டிரெய்லர்!

SCROLL FOR NEXT