செய்திகள்

மீண்டும் 5 விக்கெட்டுகள் எடுத்த ஷாபாஸ் நதீம்: வெற்றி முனைப்பில் இந்திய ஏ அணி! (முழு விடியோ)

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்...

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி 3-ம் நாள் முடிவில் 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து வெற்றி முனைப்பில் உள்ளது.

நார்த் சவுண்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகீம் கார்ன்வால் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 59 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஷாபாஸ் நதீம் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதையடுத்து இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 104.3 ஓவர்களில் 312 ரன்கள் எடுத்தது. ஷிவம் டுபே 71 ரன்களும் சஹா 66 ரன்களும் எடுத்தார்கள். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

மே.இ. தீவுகள் அணி தனது 2-வது இன்னிங்ஸில், 77 ஓவர்களில் 180 ரன்களுக்குச் சுருண்டது. 29 வயது ஷாபாஸ் நதீம் இந்தமுறையும் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். சிராஜ் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து இந்திய ஏ அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 97 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் 2-வது இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 10.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து வெற்றி முனைப்பில் உள்ளது. கடைசி நாளான இன்று இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி கிடைத்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT