தொலைக்காட்சி ஒளிபரப்பில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் புதிய வரலாறு படைத்துள்ளது.
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொலைக்காட்சிகளில் இதன் ஒளிபரப்பை காணும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக முதல் 3 வாரங்களில் மட்டும் 367 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் சராசரியாக 303 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2019 உலகக் கோப்பையிலேயே இதுவரையிலான ஆட்டங்களில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி தான் உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்தப் போட்டியை தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் இந்தியாவில் மட்டும் 206 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.