செய்திகள்

4-ஆம் வரிசையில் தோனி? ரோஹித் கருத்தை பிரதிபலிக்கும் முன்னாள் ஆஸி. வீரர்

இங்கிலாந்து ஆடுகங்கள் இதுபோன்ற மிகப்பெரிய போட்டித் தொடரின் பிற்பகுதியில் சற்று மந்தமடையும். 

Raghavendran

மகேந்திர சிங் தோனி 4-ஆம் வரிசையில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

ஒரு அணி சிறப்பாக செயல்பட்டு வரும்போது அதில் மாற்றங்கள் மேற்கொள்வதை நான் பெரிதும் விரும்புவதில்லை. தற்சமயம் இந்திய அணியும் அதேபோன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த அணியின் 4-ஆவது வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையவில்லை.

தற்போது உலகக் கோப்பை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், மகேந்திர சிங் தோனி அந்த இடத்தில் களமிறங்குவது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும். அதேபோன்று ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணியில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

ஏனென்றால் பொதுவாக இங்கிலாந்து ஆடுகங்கள் இதுபோன்ற மிகப்பெரிய போட்டித் தொடரின் பிற்பகுதியில் சற்று மந்தமடையும். இதனால் சுழற்பந்துக்கு சாதகமாகும். அதிலும் ஜடேஜா இடதுகை சுழற்பந்து வீச்சாளராக இருப்பது கூடுதல் பலம். அவருடைய அதிரடி பேட்டிங் கடைசி கட்டத்தில் இந்திய அணிக்கு கைகொடுக்கும். ஜடேஜா உலகின் தலைசிறந்த ஃபீல்டரும் கூட என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா, இந்திய அணியின் 4-ஆம் வரிசை வீரராக தோனி களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT