முகப்பு
செய்திகள்

37 பந்துகளில் சதமடித்தபோது என் வயது 16 அல்ல: உண்மையை வெளிப்படுத்தினார் சாஹித் அஃப்ரிடி!

அதைவிடவும் அவருக்கு 16 வயதுதான் என்பது மேலும் வாயைப் பிளக்கவைத்தது. எனினும் அஃப்ரிடியின் வயது குறித்துப் பலரும் சந்தேகங்களை...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:

1996-ல், 37 பந்துகளில் சதமடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் பாகிஸ்தான் சாஹித் அஃப்ரிடி. அதைவிடவும் அவருக்கு 16 வயதுதான் என்பது மேலும் வாயைப் பிளக்கவைத்தது. எனினும் அஃப்ரிடியின் வயது குறித்துப் பலரும் சந்தேகங்களைத் தொடர்ந்து எழுப்பி வந்தார்கள். 

ஆனால் அப்போது தெரிவிக்கப்பட்ட தகவலில் உண்மையில்லை என தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்படுத்தியுள்ளார் அஃப்ரிடி. கேம்சேஞ்சர் என்கிற நூல் இந்த வாரம் இந்தியா, பாகிஸ்தானில் வெளியாகியுள்ளது. அந்த நூலில், 1975-ன் நான் பிறந்தேன். 1996 அக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு நான் தேர்வாகினேன். நிர்வாகிகள் சொன்னது போல எனக்கு 16 வயது அல்ல, 19 வயது. என்னுடைய வயதை நிர்வாகிகள் தவறாகக் கூறிவிட்டார்கள் என்று எழுதியுள்ளார். இதன்மூலம் 37 பந்துகளில் சதம் அடித்தபோது அவருக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என்கிற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

2016 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் அஃப்ரிடி. அப்போது 36 வயதில் அவர் ஓய்வு பெறுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் 40 அல்லது 41 வயதிலேயே ஓய்வு பெற்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.