செய்திகள்

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான முன்னாள் ஆல்ரவுண்டர்!

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எழில்

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் மிக அதிக வாக்குகள் பெற்று அவர் வெற்றியடைந்தார். பின்னிக்கு 943 வாக்குகளும் எம்.எம். ஹரிஷுக்கு 111 வாக்குகளும் கிடைத்தன. பின்னி இதற்கு முன்பு 2007 முதல் 2012 வரை கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 

1983 உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் பின்னி. அப்போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். இந்திய அணிக்காக 27 டெஸ்டுகளிலும் 72 ஒருநாள் ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

அழகிய கண்ணே... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT