முகப்பு
செய்திகள்

உலக மகளிர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் மஞ்சு ராணி!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 12 அக்டோபர், 2019 at 5:47 PM
பகிர்:

ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கிய உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ரக்சத்தை எதிர்கொண்டார் மஞ்சு ராணி. மிகவும் கவனமாக விளையாடிய மஞ்சு ராணி, 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் இந்த ஆட்டத்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஹரியாணாவைச் சேர்ந்த மஞ்சு ராணி, முதல்முறையாக உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்கிறார். இறுதிச்சுற்றில் ரஷியாவின் எகாடெரினாவை அவர் சந்திக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.