முகப்பு
செய்திகள்

மீண்டும் வெல்லுமா இந்திய இளைஞர் படை?: யு-19 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு!

தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள யு-19 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2019 at 2:26 PM
பகிர்:

தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள யு-19 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் நாளான ஜனவரி 17 அன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது தென் ஆப்பிரிக்க அணி. நான்கு நகரங்களில், எட்டு மைதானங்களில் 24 நாள்களுக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா - நியூஸிலாந்து, இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகள் கொண்ட பிரிவில் உள்ளது. ஜனவரி 19 அன்று நடைபெறவுள்ள தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்திய அணி. 

யு-19 உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி நான்கு முறையும் ஆஸ்திரேலிய இரண்டு முறையும் வென்றுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.