முகப்பு
செய்திகள்

ஹாக்கி டெஸ்ட் தொடர் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் ஐரோப்பா பயணம்

ஒலிம்பிக் ஹாக்கி தேர்வுப் போட்டிக்கு தயாராகும் வகையில் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள ஹாக்கி டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய ஆடவர்,மகளிர் அணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:10 AM
பகிர்:


ஒலிம்பிக் ஹாக்கி தேர்வுப் போட்டிக்கு தயாராகும் வகையில் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள ஹாக்கி டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய ஆடவர்,மகளிர் அணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றன.
2020 டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில் ஹாக்கிப் போட்டியில் இடம் பெறுவதற்காக தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் நவம்பரில் நடைபெறுகின்றன. இதற்காக அணியை பலப்படுத்தும் வகையில் இந்திய ஆடவர் அணி, உலக சாம்பியன் பெல்ஜியம் மற்றும் வலுவான ஸ்பெயினுடன் 5 டெஸ்ட் ஆட்டங்களில் ஆடவுள்ளது.பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதே நேரம் மகளிர் அணி பிரிட்டன் அணியுடன் மார்லோவில் செப். 27 முதல் அக். 4 வரை 5 ôட்டங்களில் ஆடுகிறது.
மேலும் ஆடவர் அணி வரும் நவம்பர் மாதம் புவனேசுவரத்தில் நடக்க உள்ள எப்ஐஎச் ஹாக்கி தகுதிச் சுற்றில் மோதுகின்றன.
இதுதொடர்பாக ஆடவர் அணி பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறியதாவது:
உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியன் பெல்ஜியத்துடன் ஆடுவது நமது அணிக்கு மிகுந்த சோதனையாக அமையும். ஸ்பெயினுடன் 2 ஆட்டங்களில் ஆட உள்ளோம் என்றார்.
 பெல்ஜியத்துடனும், வியாழக்கிழமை, அக். 1, 3 தேதிகளிலும் ஸ்பெயினுடன் செப். 28, 29 தேதிகளிலும் மோதுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →