முகப்பு
செய்திகள்

பயிற்சி ஆட்டம்: சதமடித்த தென் ஆப்பிரிக்க வீரர்!

2-ம் நாள் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:13 AM
பகிர்:

ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, அக்டோபர் 2-ம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. அதற்கு முன்பு, தென் ஆப்பிரிக்கா - ரோஹித் சர்மா தலைமையிலான போர்டு பிரசிடென்ட் லெவன் ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் விஜயநகரத்தில் நேற்று தொடங்கியது.

நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்புக்கு ஆளானது. மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீச முடியாமல் போனது. இதனால் இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மழை இன்றும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் 50 ஓவர்கள் வரை வீசமுடிந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 2-ம் நாள் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் எயிடன் மார்க்ரம் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டார். பவுமா 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். பிரசிடென்ட் லெவன் அணியைச் சேர்ந்த டிஏ ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.