நாங்கள் விளையாடிய காலத்தில் சொந்த நலனுக்காக இந்திய வீரர்கள் சதமடித்தார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
ரமீஸ் ராஜாவுடனான உரையாடலில் இன்ஸமாம் கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடியபோது எங்களை விடவும் அவர்களுடைய பேட்டிங் பலமாக இருக்கும். எங்கள் அணி வீரர்கள் 30,40 ரன்கள் எடுத்தாலும் அது அணியின் நலனுக்காக இருக்கும். ஆனால், இந்திய வீரர்கள் சதமடித்தாலும் அது சொந்த நலனுக்காக இருக்கும். அதுதான் இரு அணி வீரர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்றார்.
1991 முதல் 2007 வரை 120 டெஸ்டுகள், 378 ஒருநாள், 1 டி20-யில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார் இன்ஸமாம்.
இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 59 டெஸ்டுகள், 132 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 9 டெஸ்டுகள், 55 ஒருநாள் ஆட்டங்கள், 6 டி20 ஆட்டங்களில் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி 12 டெஸ்டுகள், 73 ஒருநாள் ஆட்டங்கள், 1 டி20 ஆட்டத்தில் வென்றுள்ளது. எனினும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் இந்திய அணி வென்றுள்ளது. ஓர் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.