முகப்பு
செய்திகள்

மன்கட் சர்ச்சை பற்றிய பாண்டிங் கருத்து: அஸ்வினுக்குப் பெருகும் ஆதரவு!

பாண்டிங்கின் கருத்தால் அஸ்வினுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

மன்கட் சர்ச்சை தொடர்பாக தில்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ள கருத்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த வருட ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு பவுலர் பந்துவீசுவதற்கு முன்பு ரன்னர் கிரீஸை விட்டு வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் உள்ளது. அதை மன்கட் முறை என அழைக்கின்றனர். இந்த முறையில் அவுட் செய்வது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஏற்கெனவே மன்கட் முறையில் அவுட் செய்வது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக கிரீஸை விட்டு நகர்ந்தால், பேட்ஸ்மேன்களுக்கு, எச்சரிக்கை தருவது பவுலர்களின் வழக்கம். அது கண்டிப்பானதில்லை. இந்நிலையில் அஸ்வினும் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது எனது உள்ளுணர்வு மற்றும் விதிகளின்படி தான் என அஸ்வின் கூறினார். நான் செய்தது ஆட்டத்தின் தன்மைக்கு எதிரானது என்றால் கிரிக்கெட் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் ஆட்டத்தின் தன்மை எங்கே பாதிக்கப்படுகிறது. இது முன்கூட்டியே திட்டமிட்டது இல்லை. ஐசிசி விதி 41.16-இன்படி மன்கட் முறையில் அவுட் செய்யலாம். ஒருவருக்கு பொருந்தும் விதி ஏன் மற்றொருவருக்கு பொருந்தாது என்றார்.

இந்நிலையில் மன்கட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வதற்கு தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேட்டியளித்ததாவது:

கடந்த வருடம் மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தபோது என்னுடைய அணி வீரர்களிடம் நான் சொன்னேன், இதுபோல யாராவது செய்ய நினைத்தால் நாம் அதுபோன்ற ஒரு கிரிக்கெட்டை விளையாட எண்ணவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றேன். எனவே இம்முறை அஸ்வினுடன் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். அது மிகவும் தீவிரமாக இருக்கும் எனத் தெரியும். ஆனால் என் கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அதைச் செய்ததாக அஸ்வின் கூறலாம். ஆனால் கிரிக்கெட்டில் அது நியாயம் அல்ல. தில்லி கேபிடல்ஸ் அணி அதுபோல விளையாடக் கூடாது என எண்ணுகிறேன் என்றார். 

மன்கட் அவுட் தொடர்பாக பாண்டிங்கின் கருத்தால் அஸ்வினுக்கு ஆதரவு பெருகியுள்ளது. விதிமுறைப்படி நடக்க எண்ணும் பந்துவீச்சாளரை பாண்டிங் தடுப்பது ஏன், பேட்ஸ்மேன் விதிமுறைகளை மீறும்போது அதற்குரிய விளைவுகள் இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் இந்த சர்ச்சை பற்றி கூறியதாவது:

தனக்குச் சாதகமான நிலை உருவாகும் என்று தெரிந்தும், பந்துவீசுவதற்கு முன்பு கிரீஸை விட்டு (நடுவர் பக்கமுள்ள) பேட்ஸ்மேன் நகர்வது கிரிக்கெட்டின் ஆன்மாவுக்கு எதிரானது கிடையாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →