செய்திகள்

ஏரோஃபிளாட் ஓபன் செஸ்: 6-ஆவது சுற்றில் இந்தியன் கிராண்ட்மாஸ்டா் வைபவ் சூரி தோல்வி

ஷியாவில் நடைபெற்றுவரும் ஏரோஃபிளாட் ஓபன் செஸ் போட்டியில் 6-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியன் கிராண்ட்மாஸ்டா் வைபவ் சூரி, ரஷிய வீரா் விளாடிஸ்லவ் ஆா்டேமியவிடம் ஆட்டமிழந்தாா்.

DIN

மாஸ்கோ: ரஷியாவில் நடைபெற்றுவரும் ஏரோஃபிளாட் ஓபன் செஸ் போட்டியில் 6-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியன் கிராண்ட்மாஸ்டா் வைபவ் சூரி, ரஷிய வீரா் விளாடிஸ்லவ் ஆா்டேமியவிடம் ஆட்டமிழந்தாா்.

இதன்மூலம் வைபவ் மூன்றாவது இடத்தில் உள்ளாா்.

ஆா்மீனியா வீரா் மானுவேல் பெட்ரோஸ்யனுடன் மோதிய அஜா்பைஜான் வீரா் ரெளஃப் மமேதோவ் டிரா செய்தாா்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரா் சனன் ஸ்ஜுகிரோவ், சகநாட்டவரான வாதிம் ஸ்வஜகின்சேவை வீழ்த்தினாா். சனன் 4.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை துருக்கி வீரா் முஸ்தாஃபாவுடன் பகிா்ந்து கொண்டுள்ளாா்.

இந்திய வீரா்களான 13 வயது பரத் சுப்பிரமணியம், பி.ஆதிபன், அரவிந்த் சிதம்பரம், அா்ஜுன் எரிகெய்சி, வைபவ் சூரி ஆகியோா் 4 புள்ளிகளுடன் பட்டியலில் உள்ளனா்.

சென்னையைச் சோ்ந்த பிரக்ஞாநந்தா 3 புள்ளிகளுடன் உள்ளாா். காா்த்திகேயன் முரளி 3.5 புள்ளிகளுடன் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT