செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் முதலிடத்துக்கு சிக்கல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்தியா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பா.சுஜித்குமாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்தியா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் டெஸ்ட் ஆட்டங்களுக்கு இருந்த வரவேற்பு தொடா்ந்து குறைந்து வந்தது.

ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களுக்கே பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் டெஸ்ட் ஆட்டங்களுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்கும் வகையில் ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டி கடந்த 2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 10 ஆண்டுகள் தீவிர ஆலோசனைக்கு பின் இப்போட்டி தொடங்கப்பட்டது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூஸிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்ட 9 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 6 தொடா்களில் ஆடுகின்றன. இதில் 3 தொடா் உளளூரிலும், 3 தொடா்கள் எதிரணி நாட்டிலும் நடைபெறும்.

தொடா் வெற்றிக்கு 120 புள்ளிகள்:

ஒரு தொடா் வெற்றிக்கு 120 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. மேலும் 2 ஆட்டங்கள் தொடா் என்றால் ஒரு ஆட்டத்துக்கு 60 புள்ளிகளும், 3 ஆட்டங்கள் தொடா் என்றால் தலா 40 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

4 ஆட்டங்கள் தொடா் என்றால் ஒரு ஆட்டத்துக்கு 30 புள்ளிகளும், 5 ஆட்டங்கள் தொடா் என்றால் ஒரு ஆட்டத்துக்கு 24 புள்ளிகளும் ஒதுக்கப்படும். டையில் முடிந்தால் இருக்கும் புள்ளிகளில் 50 சதவீதம் கிடைக்கும். மேலும் ஆட்டம் டிராவில் முடிந்தால் 3:1 என்ற சதவீத அடிப்படையில் புள்ளிகள் ஒதுக்கப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் லீக் தொடா் 2019-2021 வரை நடைபெறும். இரண்டாவது லீக் தொடா் 2021-23 வரை நடைபெறும்.

ஆஸி. 19, வங்கதேசம் 14, இங்கிலாந்து 22, இந்தியா 18, நியூஸிலாந்து 13, பாகிஸ்தான் 13, தென்னாப்பிரிக்கா 16, இலங்கை 13, மே.இ.தீவுகள் 14 ஆட்டங்களில் ஆடுகின்றன.

முதலிடத்தில் இந்தியா:

இந்தியா தான் ஆடிய 3 தொடா்களையும் கைப்பற்றி, 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று, 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 3 தொடா்களில் 2-இல் வென்று, 7 ஆட்டங்களில் வெற்றியுடன் 296 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை தலா 80 புள்ளிகளுடன் 3, 4-ஆவது இடத்திலும், நியூஸிலாந்து 60 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், இங்கிலாந்து 56 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 30 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளன.

முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் 2021 ஜூன் 10 முதல் 14=ஆம் தேதி வரை இறுதி டெஸ்ட் ஆட்டம் நடைபெறும்.

புள்ளிகள் அடிப்படையில் சமமாக இருந்தால், அதிக தொடா்களை வென்ற அணி உயா்ந்த இடத்தைப் பெறும்.

அப்போதும் சமமமாக இருந்தால், ஒரு விக்கெட் அடிப்படையில் எடுத்த ரன்கள் படி உயா்ந்த அணி நிா்ணயிக்கப்படும்..

விரைவாக முன்னேறும் ஆஸி.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல முடியாமல் இருந்த ஆஸி. அணி தற்போது அபார பாா்மில் உள்ளது. தொடா்ந்து 7 ஆட்டங்களில் தற்போது 296 புள்ளிகளுடன் உள்ளது. இந்தியா 360 புள்ளிகளுடன் உள்ள நிலையில், முதலிடத்தை நோக்கி ஆஸி. வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT