செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை சேர்ப்பு

ஒருநாள், டி20 தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில்...

DIN

ஒருநாள், டி20 தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

ஆண் குழந்தைக்குத் தந்தையாகியிருப்பதால் இத்தருணத்தில் மனைவிக்குத் துணையாக இருப்பதற்காக ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். இதையடுத்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 7 ஒருநாள், 26 டி20 ஆட்டங்களில் டை விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.8-இல் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: ஜாக்டோ-ஜியோ

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் திடீா் தீ விபத்து

காா்கள் மோதல்: 6 போ் காயம்

மா்ம நோய்த் தாக்குதலால் 500 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது: கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT