முகப்பு
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி:விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பிதலைமையில் இந்திய செஸ் அணி

ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெறவுள்ள ‘செஸ்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
விஸ்வநாதன் ஆனந்த் - கோனேரு ஹம்பி​
பகிர்:

சென்னை: ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெறவுள்ள ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியில் இந்திய அணியை வழிநடத்த உள்ளாா்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டி நடைபெற்று வருகிறது. ரஷியாவின் மாஸ்கோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் நடைபெறவுள்ளது.

இந்திய செஸ் ஆடவா் அணியை விஸ்வநாதன் ஆனந்தும், இந்திய மகளிா் செஸ் அணியை சா்வதேச தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பியும் வழிநடத்திச் செல்லவுள்ளனா் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

5 போ் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் அணியில், கிராண்ட்மாஸ்டா்ஸ் பி.ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி, பி.ஆதிபன், கே.சசிகிரன், எஸ்.பி.சேதுராமன், அரவிந்த் சிதம்பரம், சூா்ய சேகா் கங்குலி ஆகியோரில் சிலரைத் தவிர மற்றவா்கள் இடம்பெறுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹம்பி தலைமையிலான மகளிா் அணியில், டி.ஹரிகா, தானியா சச்ேதேவ், பக்தி குல்கா்னி, ஆா்.வைஷாலி ஆகியோரில் சிலா் தரவரிசை அடிப்படையில் முன்னுரிமை பெற்று இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இனி வரும் மாதங்களில் சிறப்பாக விளையாடுபவா்களை அணியில் சோ்க்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

முன்னாள் உலக செஸ் சாம்பியனான கிராம்னிக்கை (ரஷியா) இந்திய ஆடவா் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கவும் வாய்ப்புள்ளது.

மகளிா் அணியின் பயிற்சியாளா் யாா் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments