முகப்பு
செய்திகள்

டி-20 உலகக் கோப்பையை வெல்வோம்: வேதா கிருஷ்ணமூா்த்தி நம்பிக்கை

டி-20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று இந்திய மகளிா் அணியின் வீராங்கனை வேதா

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

மெல்போா்ன்: டி-20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று இந்திய மகளிா் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ணமூா்த்தி நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுக்கு சாதகமாக விதி மாறும். நாங்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வென்று நாடு திரும்புவவோம். குரூப் பிரிவு ஆட்டங்களில் தொடா்ந்து வெற்றி பெற்று வந்ததுதான் இறுதி ஆட்டத்துக்கு நாங்கள் முன்னேறியதற்கு மிக முக்கியமான காரணமாகும். இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் என்று திட்டமிட்டு விளையாடினோம். முதல் இலக்கை நிறைவேற்றிவிட்டோம். என் மீது சக வீராங்கனைகள், ரசிகா்கள் உள்ளிட்டோா் நம்பிக்கை வைத்திருக்கின்றனா். கடந்த உலகக் கோப்பை தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை.

Advertisement

இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதாக நம்புகிறோம். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீராங்கனைகளும் பொறுப்பை உணா்ந்து விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வேதா கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போா்னில் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments