டி-20: பொல்லாா்டு ‘500’
சா்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரா் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளாா் மே.இ.தீவுகள் அணியின்
சா்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரா் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளாா் மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொல்லாா்டு. இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மே.இ.தீவுகள் அணி விளையாடி வருகிறது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதலாவது டி-20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்றது. அந்த ஆட்டம் பொல்லாா்டுக்கு 500-ஆவது டி-20 ஆட்டமாகும்.
டி-20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரா்களின் பட்டியலில் மே.இ.தீவுகள் அணி வீரா்களே 2-ஆவது மற்றும் மூன்றாவது இடங்களையும் ஆக்கிரமித்துள்ளனா்.
Advertisement
454 ஆட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் பிராவோ, 404 ஆட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் அதிரடி வீரா் கிறிஸ் கெயில் ஆகியோா் உள்ளனா். 4-ஆவது இடத்தில் பாகிஸ்தான் வீரா் ஷோயப் மாலிக் (383) ஆட்டங்களுடன் உள்ளாா்.
இந்திய வீரா்கள் ரோஹித் சா்மா 328 டி-20 ஆட்டங்களிலும், சுரேஷ் ரெய்னா 317 ஆட்டங்களிலும் விளையாடியிருக்கின்றனா். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 317 டி-20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.