செய்திகள்

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: இந்திய வெற்றிக்கு வில்லனாகிறதா மழை?

DIN


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 157 ரன்கள் தேவை என்ற நிலையில், மழையால் ஆட்டம் தொடங்குவது தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்கள் எடுத்து 95 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து, ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்தியாவின் வெற்றிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தைத் தந்த ராகுல் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சேத்தேஷ்வர் புஜாரா 3 பவுண்டரிகள் அடித்து துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. ரோஹித் மற்றும் புஜாரா இருவரும் தலா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க 157 ரன்களே தேவை என்ற நிலை இருப்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால், தொடர் மழை காரணமாக 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மழை நின்றாலும் ஆட்டத்தின் இடையே மழை பெய்து இடையூறு ஏற்படலாம் என்று வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. ஆட்டத்தின் நடுவே மழை பெய்யும் பட்சத்தில் ஆடுகளத்தின் தன்மை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாள் முழுவதும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டாலும் ஆட்டம் டிராவாகி இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோகும். ஒருவேளை ஆட்டம் தொடங்கினாலும் இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஆடுகளத்தின் தன்மை இந்தியாவுக்கு சிக்கலை உண்டாக்கலாம். இதனால், வெற்றி வாய்ப்பு டிராவில் முடியலாம் அல்லது தோல்வியில்கூட முடிவதற்கான வாய்ப்பு உள்ளது.

மழை காரணமாக பிரகாசமாக இருந்த இந்தியாவின் வெற்றி வாய்ப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது.

இந்த தாமதம் காரணமாக 5-ம் நாள் உணவு இடைவேளை முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT