முகப்பு
செய்திகள்

இந்தியாவுடன் ரூட், ஆண்டர்சன் மட்டுமே விளையாடுகிறார்கள்: பீட்டர்சன் காட்டம்

​இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமரிசித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:


இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமரிசித்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் மழை காரணமாக டிராவில் முடிந்தது. இருப்பினும் அந்த ஆட்டத்தில் ரூட் முதல் இன்னிங்ஸில் அரைசதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்தார். ஆண்டர்சன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இதிலும், ரூட் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ரோரி பர்ன்ஸ் 49 ரன்கள் சேர்த்தார். 

இந்த நிலையில் ரூட், ஆண்டர்சன் தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என ட்விட்டர் பக்கத்தில் பீட்டர்சன் விமரிசித்துள்ளார். மற்ற வீரர்கள் விரைவில் எழுச்சி பெற வேண்டும் என்றும் அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →