முகப்பு
செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிறிஸ் கேர்ன்ஸ்: உடல்நிலை குறித்து புதிய தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கேர்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கேர்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்டுகள், 215 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் கிறிஸ் கேர்ன்ஸ் விளையாடியுள்ளார். 1989-ல் அறிமுகமாகி, 2006 வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்ட கேர்ன்ஸ், கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார். 2010-ல் திருமணம் ஆன பிறகு ஆஸ்திரேலியாவிலுள்ள கேன்பராவில் தனது குடும்பத்தினருடன் பல வருடங்களாக வாழ்ந்துள்ளார். 

கேன்பராவில் கிறிஸ் கேர்ன்ஸுக்குச் சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மற்றொரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

செயற்கை சுவாச உதவியின்றி நல்ல நிலையில் கேர்ன்ஸ் உள்ளார். சிட்னியில் உள்ள மருத்துவமனையிலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் அவரால் பேச முடிந்தது என்று கேர்ன்ஸின் வழக்கறிஞர் ஆரோன் லாயிட் தகவல் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →