ஆசிய கோப்பையில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு கரோனா
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்ற சில இந்திய வீராங்கனைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தென்கொரியாவின் டாங்கே நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்-தாய்லாந்தும் தொடக்க ஆட்டத்தில் மோதின. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி 13-0 என்கிற கணக்கில் தாய்லாந்தை வென்றனர்.
இந்நிலையில் இன்று தென்கொரியாவுடன் நடக்க இருந்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றைய போட்டி ரத்து செய்யப்பபட்டிருக்கிறது.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மலேசியா-இந்தியா ஆட்டம் நடைபெறவிருந்த நிலையில், மலேசிய வீராங்கனைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.