செய்திகள்

சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள்

கரோனா பரிசோதனையில் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

DIN

சென்னையில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் தங்களுடைய பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல்  9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன. 

சென்னையில் இந்திய, இங்கிலாந்து அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் பணியாளர்களும் போட்டி நடுவர்களும் ஆறு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சென்னைக்கு முன்பே வந்த பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ் ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்களும் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துக்கொண்டு இன்று முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதர இங்கிலாந்து வீரர்கள் செவ்வாய் முதல் பயிற்சியைத் தொடங்குவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்துள்ளது. மேலும் 2-வது கரோனா பரிசோதனையில் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT