செய்திகள்

இலங்கையில் திறமையை நிரூபிக்கத் துடிக்கும் பிரித்வி ஷா

நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்...

DIN

நீண்ட நாளைக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் ஆட்டம் ஜூலை 18 அன்று தொடங்குகிறது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் பிரித்வி ஷா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் என் மனத்தில் உள்ளது. இந்தியா அல்லது வேறு எந்த அணியில் நான் விளையாடினாலும் அணியின் நலன் தான் எனக்கு முக்கியம். இந்திய அணிக்காக இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். 

தில்லி கேபிடல்ஸ் அணியில் நானும் ஷிகர் தவனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குகிறோம். அதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்கள்தாம். இப்போது எங்களிடையேயான நட்பு இன்னும் நெருக்கமாகிவிட்டது. இந்தப் பிணைப்பை ஆடுகளத்திலும் காண முடியும். அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT