டோக்கியோ ஒலிம்பிக்சின் முதல் தங்க பதக்கத்தை வென்ற சீனா
டோக்கியோ ஒலிம்பிக்சின் முதல் தங்க பதக்கத்தை சீனா வென்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்க பதக்கத்தை சீனா வென்றுள்ளது. 10 மீட்டர் பெண்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் யாங் குவான் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
ரஷியாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளி பதக்கத்தையும் சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டின் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டுவரும் போட்டி, பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பச் வீரர்களுக்கு பதக்கம் வழங்கினார். கரோனா வழிமுறைகள் காரணமாக, பதக்கமானது வீரர்களுக்கு தட்டில் வைத்து தரப்பட்டது..