செய்திகள்

முதல் டெஸ்டில் அதிரடியாக விளையாடி சாதனை படைத்த ஷஃபாலி வர்மா (ஹைலைட்ஸ் விடியோ)

DIN

இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் 96 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார் இளம் வீராங்கனை ஷாஃபாலி வர்மா.

இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிா் அணி தனது முதல் இன்னிங்ஸில் 121.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, வியாழக்கிழமை முடிவில் 60 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ஹா்மன்பிரீத் கௌா் 4, தீப்தி சா்மா 0 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

ஷஃபாலி வா்மா 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 96 ரன்கள் விளாசி நூலிழையில் சதத்தை தவறவிட்டாா். ஸ்மிருதி மந்தனா 14 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் சோ்த்து வெளியேற, பூனம் ரௌத் 2 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஷிகா பாண்டே டக் அவுட்டாக, கேப்டன் மிதாலி ராஜ் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இங்கிலாந்து தரப்பில் ஹீதா் நைட் 2, கேட் கிராஸ், நடாலி ஸ்கீவா், சோஃபி தலா ஒரு விக்கெட் சாய்த்தனா்.

இந்திய மகளிர் அணியில் முதல் டெஸ்டில் இதற்கு முன்னர் 1995-ல் சந்தர்கந்தா கெளல் 75 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடித்து முதல் டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷஃபாலி வர்மா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT