சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத்தைத் தொடர்ந்து இர்பான் பதானுக்கும் கரோனா பாதிப்பு
சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் வீரர் இர்பான் பதானுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் வீரர் இர்பான் பதானுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் முன்னாள் வீரர் இர்பான் பதானுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா அறிகுகள் இல்லாததால் வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்று இர்பான் பதான் ட்வீட் செய்துள்ளார்.
36 வயது இர்பான் பதான், இந்திய அணிக்காக 29 டெஸ்டுகள், 120 ஒருநாள், 24 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காகக் கடைசியாக 2012-ல் விளையாடினார்.