செய்திகள்

இந்திய அணியினர் கவனத்தைத் திசை திருப்பியதால் டெஸ்ட் தொடரில் தோற்றோம்: ஆஸி. கேப்டன் டிம் பெயின்

தொல்லை ஏற்படுத்தி தேவையில்லாத விஷயங்களுக்குக் கவனத்தைச் சிதற விடுவார்கள்...

DIN

இந்திய அணியினர் கவனத்தைத் திசை திருப்பியதால் டெஸ்ட் தொடரில் தோற்றோம் என ஆஸி. கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடைசி நாளன்று கடினமான இலக்கை விரட்டி டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. 4-வது டெஸ்டில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது. 

இந்நிலையில் டெஸ்ட் தொடர் தோல்வி பற்றி ஒரு விழாவில் ஆஸி. கேப்டன் டிம் பெயின் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதில் உள்ள சவாலே அவர்கள் உங்களுக்குத் தொல்லை ஏற்படுத்தி தேவையில்லாத விஷயங்களுக்குக் கவனத்தைச் சிதற விடுவார்கள். டெஸ்ட் தொடரில் அந்த வலையில் நாங்கள் விழுந்துவிட்டோம். 

சிறந்த உதாரணம், அவர்கள் பிரிஸ்பேனுக்குச் செல்லமாட்டோம் என்றார்கள். இதனால் நாங்கள் எங்கு செல்லப்போகிறோம் என்பதை அறியாமல் இருந்தோம். இதுபோன்ற கவனச்சிதறலை நன்கு உருவாக்குவார்கள். அதனால் எங்கள் கவனம் பந்தை விட்டு விலகிவிட்டது என்றார்.

பிரிஸ்பேனில் கரோனா விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் அங்கு விளையாட இந்திய அணி முதலில் தயக்கம் காட்டியது. எனினும் அங்குச் சென்று விளையாடி, வரலாற்று வெற்றியை அடைந்தது. 1988-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குப் பிறகு பிரிஸ்பேனில் ஆஸி. அணியைத் தோற்கடித்த பெருமையைப் பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT