முஷ்ஃபிகுர் ரஹிம் (கோப்புப் படம்) 
செய்திகள்

முதல் ஒருநாள்: இலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேசம்!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது வங்கதேச அணி.

DIN

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது வங்கதேச அணி.

டாக்காவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. கேப்டன் தமிம் இக்பால் 52 ரன்களும் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் 84 ரன்களும் மஹ்முதுல்லா 54 ரன்களும் எடுத்தார்கள். இலங்கை அணித் தரப்பில் தனஞ்ஜெயா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த இலக்கை இலங்கை அணி எளிதாக அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 48.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. வங்கதேச அணித் தரப்பில் மெஹிடி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளையும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்கள். 

2-வது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் அடுத்தடுத்த 2 கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

தில்லியில் நச்சுப்புகை மூட்டத்தால் காற்று மாசுபாடு

தஞ்சாவூரில் 240 டன் குப்பைகள் சேகரிப்பு

பழவத்தான் கட்டளை வாய்க்கால் பகுதியில் நெல் பயிா் மூழ்கி சேதம்

மலபார் தீபாவளி... ஃபெமினா ஜார்ஜ்!

SCROLL FOR NEXT