செய்திகள்

மும்பை அணி பயிற்சியாளர்: வாசிம் ஜாஃபர் விண்ணப்பம்

மும்பை அணி பயிற்சியாளர் தேர்வுக்கு முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் விண்ணப்பம் செய்துள்ளார்.

DIN

மும்பை அணி பயிற்சியாளர் தேர்வுக்கு முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் விண்ணப்பம் செய்துள்ளார்.

விஜய் ஹசாரே போட்டியை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளராகவும் ரமேஷ் பவார் செயல்பட்டார். தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்களைக் கோரியிருந்தது மும்பை கிரிக்கெட் சங்கம்.

முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர், சைராஜ் பஹுதுலே, அமோல் முசும்தார் போன்ற பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் நேர்காணல் வழியாக பயிற்சியாளர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

இந்தியாவுக்காக 31 டெஸ்டுகளில் விளையாடிய வாசிம் ஜாஃபர், உத்தரகண்ட் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டார். எனினும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அப்பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் வாசிம் ஜாஃபர்  செயல்படுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT