முகப்பு
செய்திகள்

தோனியின் சிறப்பை ஐபிஎல் 2-ம் பாதியில் பார்க்கலாம்: தீபக் சஹார்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் சிறப்பை 14-வது ஐபிஎல் சீசனின் 2-ம் பாதியில் பார்க்கலாம் என வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் சிறப்பை 14-வது ஐபிஎல் சீசனின் 2-ம் பாதியில் பார்க்கலாம் என வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஸ்போர்ட்ஸ்கீடாவுக்கு சஹார் அளித்த பேட்டியில் கூறியது:

"ஒரு பேட்ஸ்மேனால் 15-20 ஆண்டுகளுக்கு ஒரே மாதிரி பேட் செய்ய முடியாது. முறையாக கிரிக்கெட் விளையாடாத எந்தவொரு பேட்ஸ்மேனாலும் ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக செயல்பட முடியாது. அதற்கு சற்று நேரம் எடுக்கும். 

அவர் எப்போதும் இன்னிங்ஸை முடிக்கும் பொறுப்பையே ஏற்று விளையாடியுள்ளார். முறையாக கிரிக்கெட் விளையாடாத பட்சத்தில் அந்தப் பணி இன்னும் கடினமானதாக இருக்கும். 2018, 2019 ஐபிஎல் சீசன்களிலும் தோனி மெதுவாகவே அவரது தரத்துக்கு ஏற்ப விளையாடத் தொடங்கினார். எனவே, இந்த சீசனின் இரண்டாம் பாதியில் தோனியின் சிறப்பைப் பார்க்கலாம்" என்றார் அவர்.

14-வது ஐபிஎல் சீசன் கரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 - அக்டோபர் 15 இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் 2-ம் பாதியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →