செய்திகள்

335 நாள்களில் அடுத்த டி20 உலகக் கோப்பை: மெல்போர்னில் இறுதிச்சுற்று என அறிவிப்பு

2022 டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

DIN

2022 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ. இந்தப் போட்டி முடிந்த அடுத்த 335 நாள்களில் இன்னொரு டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.

2022 டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இப்போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. 

சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள 4 நாடுகள் தகுதிச்சுற்றின் வழியே போட்டியில் பங்கேற்கும். முதல் சுற்றில் தேர்வாகும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர அணிகளுடன் இணைந்துகொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT