தமிழக வீரர் சாய் கிஷோர் (கோப்புப் படம்) 
செய்திகள்

சையத் முஷ்டாக் அலி காலிறுதி: தமிழக அணிக்கு 182 ரன்கள் இலக்கு

ரோஹன் 51 ரன்களும் விக்கெட் விஷ்ணு வினோத் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும்எடுத்தார்கள்.

DIN

தமிழகத்துக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆட்டத்தில் கேரள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் காலிறுதியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஹைதராபாத், கேரளா, விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. 

தில்லியில் இன்று நடைபெற்று வரும் காலிறுதியில் கேரளாவுடன் தமிழக அணி மோதுகிறது. 

டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கேரளத்தின் தொடக்க வீரர் ரோஹன் 51 ரன்களும் விஷ்ணு வினோத் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தார்கள். 27 வயது விஷ்ணு வினோத் 26 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்து கடைசிக்கட்டத்தில் தமிழக அணிக்கு அதிர்ச்சி அளித்தார். கேரள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக அணி தரப்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT