செய்திகள்

நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை: ஷ்ரேயஸ் ஐயர்

DIN

சதமடிக்க ஆர்வமாக இருந்ததால் நேற்றிரவு தூங்க முடியவில்லை என ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்தது. அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 157 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அதன்பிறகு 105 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்திருந்தார். 2-ம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 57 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது.

சதமடித்தது பற்றி ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

முதல் நாளில் இருந்து நடந்த அனைத்திற்கும் மகிழ்ச்சியாக உள்ளேன். நேற்றிரவு நன்கு தூங்குவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னால் தூங்கவே முடியவில்லை. கவாஸ்கர், அறிமுக டெஸ்டுக்கான தொப்பியை எனக்கு வழங்கினார். அவர் மிகவும் ஊக்கம் அளித்தார். சதமடித்தது நிறைவைத் தந்தது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT