செய்திகள்

டி20 உலகக் கோப்பை: ஐபிஎல் போல இரண்டரை நிமிட இடைவேளை அறிமுகம்

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஐபிஎல் போல ஒவ்வொரு இன்னிங்ஸின் நடுவிலும் இடைவேளையை அறிமுகப்படுத்தவுள்ளது ஐசிசி.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

இந்நிலையில் ஐபிஎல் போல டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இடைவேளையை அறிமுகம் செய்யவுள்ளது ஐசிசி. ஐபிஎல் போட்டியில் 20 ஓவர்களில் இரண்டு முறை இடைவேளை விடப்படுகிறது. முதல் 6 முதல் 9 ஓவர்கள் வரை ஒரு இடைவேளையை ஃபீல்டிங் செய்யும் அணியும் 13 முதல் 16 ஓவர்கள் வரை ஒரு இடைவேளையை பேட்டிங் செய்யும் அணியும் தேர்வு செய்யலாம். 

அதேபோல டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 10-வது ஓவரின் முடிவில் வீரர்களுக்கு இரண்டரை நிமிட இடைவேளை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT