செய்திகள்

ரவி சாஸ்திரி உள்பட மூன்று இந்தியப் பயிற்சியாளர்களுக்கு கரோனா பாதிப்பு

ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகிய மூவரும் செப்டம்பர் 10 முதல் மான்செஸ்டரில் தொடங்கும்...

DIN

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட மூன்று பயிற்சியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மூவரும் மருத்துவச் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். பிசியோதெரபிஸ்ட் நிதின் படேலுக்கு கரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பிசிசிஐ தரப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவதால் ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகிய மூவரும் செப்டம்பர் 10 முதல் மான்செஸ்டரில் தொடங்கும் 5-வது டெஸ்டில் பங்கேற்க மாட்டார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT