டி-20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி 
செய்திகள்

டி-20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆலோசகரான மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பில்,

விராட் கோலி தலைமையில், ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், இஷான் கிஷன் உள்ளனர். 

உலகக் கோப்பை டி-20 இந்திய அணியில் அணியில் ஷிகர் தவான், சஹால், தமிழக வீரரான நடராஜன்  ஆகியோர்  இடம்பெறுவார்கள் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பட டிரைலர்!

குடும்ப அரசியல்: சேகர்பாபுவுக்கு நயினார் நாகேந்திரனின் கேள்வி! | செய்திகள்: சில வரிகளில் | 14.11.25

பிகாா் மக்கள் சரியான அரசாங்கத்தை தோ்ந்தெடுத்து இருக்கிறாா்கள்: ரேகா குப்தா

தில்லி காா் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த மின்னஞ்சல் வரைவு மூலம் திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

சன் டிவியின் லாபம் 13.4% ஆக சரிவு!

SCROLL FOR NEXT