பிசிசிஐ ஜூனியர் தேர்வுக்குழுத் தலைவராக தமிழக முன்னாள் வீரர் தேர்வு
பிசிசிஐ ஜூனியர் தேர்வுக்குழுத் தலைவராக தமிழக முன்னாள் வீரர் எஸ். ஷரத் தேர்வாகியுள்ளார்.
பிசிசிஐ ஜூனியர் தேர்வுக்குழுத் தலைவராக தமிழக முன்னாள் வீரர் எஸ். ஷரத் தேர்வாகியுள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஷரத். 27 சதங்கள் உள்பட 8700 ரன்கள் எடுத்துள்ளார். 139 முதல் தர ஆட்டங்களில் விளையாடிய அவருடைய பேட்டிங் சராசரி - 51.17.
இந்நிலையில் பிசிசிஐ ஜூனியர் தேர்வுக்குழுத் தலைவராக எஸ். ஷரத் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. தேர்வுக்குழுவில் பதிக் படேல், ரனதேப் போஸ், கிரிஷன் மோகன், ஹர்விந்தர் சிங் சோதி ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.