செய்திகள்

எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை, நடந்தது என்ன?: இன்ஸமாம் உல் ஹக் விளக்கம்

DIN

செய்திகளில் குறிப்பிட்டதுபோல தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்காக 120 டெஸ்ட், 378 ஒருநாள் ஆட்டங்களிலும் ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடியவர் இன்ஸமாம் உல் ஹக். 1991-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர், கடைசியாக 2007-ல் விளையாடி ஓய்வு பெற்றார். 

இன்ஸமாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் இன்ஸமாம் இதனை மறுத்துள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:

எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக் வெளியான செய்திகளை நான் பார்த்தேன். எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரைச் சென்று பார்த்தேன். எனக்கு ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்யவேண்டும் எனச் சொன்னார்கள். அப்போது ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அடைப்பை நீக்க ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மருத்துவமனையில் 12 மணி நேரமே அனுமதிக்கப்பட்டேன். பிறகு வீடு திரும்பிவிட்டேன். தற்போது நலமாக உள்ளேன். அசெளகரியமாக உணர்ந்ததால் உடனடியாக மருத்துவரைச் சென்று சந்தித்தேன். இதயத்துக்கு அருகில் அல்ல, வயிற்றுப்பகுதியில். மருத்துவப் பரிசோதனையை நான் தாமதப்படுத்தியிருந்தால் என் இதயம் பாதிக்கப்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறினார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT