முகப்பு
செய்திகள்

ஆண் குழந்தைக்குத் தந்தையானார் இர்பான் பதான்

இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான், 2-வது முறையாக ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான், 2-வது முறையாக ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

37 வயது இர்பான் பதான், இந்திய அணிக்காக 29 டெஸ்டுகள், 120 ஒருநாள், 24 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2012-ல் விளையாடினார். 2020-ல் ஓய்வு பெற்றார்.

2016-ல் மெக்காவில் சஃபா பைக்கைத் திருமணம் செய்தார் இர்பான் பதான். அதே வருடம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இர்பான் பதான். மகனின் பெயர் சுலைமான் கான். தாயும் சேயும் நலம் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →