செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் கேப்டன்

DIN

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

லாகூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது. பென் மெக்டர்மாட் 104, டிராவிஸ் ஹெட் 89, ஸ்டாய்னிஸ் 49 ரன்கள் எடுத்தார்கள். ஷாஹீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி அபாரமான முறையில் இலக்கை விரட்டி 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இமாம் உல் ஹக் 106 ரன்களும் கேப்டன் பாபர் ஆஸம் 114 ரன்களும் எடுத்தார்கள். ஃபகார் ஸமான் 67 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி விரட்டிய அதிகபட்ச இலக்கு இதுதான். இதற்கு முன்பு 2014-ல் வங்கதேசத்துக்கு எதிராக 329 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாபர் ஆஸம். ஆம்லா இதற்கு முன்பு 86 இன்னிங்ஸில் எடுத்த சாதனையை 83 இன்னிங்ஸில் எடுத்து சாதித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்: குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள்

பாபர் ஆஸம் - 83 இன்னிங்ஸ்
ஆம்லா - 86 இன்னிங்ஸ்
விராட் கோலி - 106 இன்னிங்ஸ்
வார்னர் - 108 இன்னிங்ஸ்
தவன் - 108 இன்னிங்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT