செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம்

DIN


வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்துள்ளது. 2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி, 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் விளையாடிய ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேசம். இதையடுத்து தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. 

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 121 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் எல்கர் 67 ரன்களும் பவுமா 93 ரன்களும் எடுத்தார்கள். 298 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தபிறகு தெ.ஆ. கீழ்வரிசை பேட்டர்கள் அபாரமாக விளையாடினார்கள். ஹார்மர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி, 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. தொடக்க வீரர் முஹ்முதுல் ஹசன் ஜாய் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹார்மர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வங்கதேச அணிக்கு 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 269 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT