செய்திகள்

அலிஸா ஹீலி 170: உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸி. 356 ரன்கள் குவிப்பு

​மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது.

DIN


மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனைகளாக அலிஸா ஹீலி மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் களமிறங்கினர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இவர்களைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். ஒரே ஓவரில் இருவரும் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹெய்ன்ஸ் 69-வது பந்திலும், 62-வது பந்திலும் அரைசதத்தை எட்டினர்.

அரைசதம் கடந்த பிறகு ஹீலி அதிரடிக்கு மாறத் தொடங்கினார். இதனால், ரன் ரேட்டும் உயரத் தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெய்ன்ஸ் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய பெத் மூனி, ஹீலியுடன் சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி 100-வது பந்தில் சதத்தை எட்டினார்.

இதன்பிறகு, ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி என்ற வகையில் இருவரும் அதிரடி காட்ட இங்கிலாந்து கடும் நெருக்கடிக்குள்ளானது. பெத் மூனி 38-வது பந்தில் அரைசதத்தைக் கடக்க, ஹீலி அடுத்த ஓவரிலேயே 150 ரன்களைத் தாண்டினார். இதனால், அணியின் ஸ்கோர் 300-ஐ தாண்டியது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் பெரிய ஸ்கோரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீலி 170 ரன்களுக்கு அன்யா ஷ்ரப்சோல் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய ஆஷ் கார்ட்னர் 1 ரன்னுக்கு ரன் அவுட் ஆனார். 

கேப்டன் மெக் லேனிங் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்து 10 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்த பந்திலேயே மூனி 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எலிஸ் பெரி இறுதியில் சற்று அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி 350 ரன்களைத் தாண்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெரி 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். தஹிலா மெக்ராத் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஷ்ரப்சோல் 3 விக்கெட்டுகளையும், எக்லெஸ்டோன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT