செய்திகள்

17 வயது மகளிர் உலக கோப்பை கால்பந்து: டிக்கெட் விற்பனை தொடங்கியது

DIN

17 வயதுக்கு குறைவான பிஃபா மகளிர் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர். 

சா்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சாா்பில் வரும் அக்டோபா் மாதம் புவனேசுவரம், நவி மும்பை, மா்மகோவா உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்தியாவும் உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. இதற்கான ஆட்ட அட்டவணை வரும் ஜூன் 24-ஆம் தேதி ஜூரிச்சில் வெளியிடப்பட்டது. 

புது தில்லியில் நேற்று (ஆக.5) இந்திய தேசிய அணியின் கேப்டன் சுனில் சேட்ரி, ஆச்டால தேவி, விளையாட்டுத்டுறை அமைச்சர், பிஃபா லெஜண்ட் லிண்ட்சே டார்ப்ளே மற்றும் இந்திய கால்பந்து வீரர்களுடன் இந்த விழா தொடங்கியது. 

அக்டோபர் 11ஆம் நாள் போட்டிகள் தொடங்க இருப்பது கூறிப்பிடத்தக்கது. டிக்கெட் விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஸ்டேடியத்தில் (புபனேஷ்வர், மும்பை, கோவா) இந்த டிக்கெட்டுகளை வாக்கிக்கொள்ளலாம். டிக்கெட் விற்பனைக்கு தொலைபேசி எண் +91-86570 19359 அல்லது இ-மெயில் contact@india2022wwc.com என்ற மெயிலை தொடர்பு கொள்ளலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படும். 

பல்வேறு என்.ஜி.ஓ குழுவிலிருந்து 200 குழந்தைகள் வந்திருந்தனர். விழாவினை தொடக்கி வைத்து அனுராக் தாக்கூர் பேசியதாவது: 

கடைசியாக 2017இல் 17வயதுக்கு குறைவான மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அது மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்று 2022ஆம் ஆண்டிற்கான டிக்கெட் விற்பனையை தொடங்கி வைக்கிறோம். கடந்த முறையை விடவும் பெரிய அளவில் வெற்றி பெறும் முனைப்பில் இதை தொடங்கி வைக்கிறோம். இதற்காகவே ‘கனவை துரத்துங்கள்’ எனும் முழக்கத்தை உருவாகியிருக்கிறோம். சுனில் கூறியபடி ஆண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களுக்கும் சமவாய்ப்பு வழங்கி வருகிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT