செய்திகள்

செஸ் போட்டி: முதல் சுற்றில் குகேஷ் வெற்றி

DIN

டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா். 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய 11 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்ற குகேஷ், இரு ஆட்டங்களை டிரா செய்து ஓர் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்தார்.  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு குகேஷ் கலந்துகொள்ளும் போட்டிகள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிறகு டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றுள்ளார் குகேஷ்.

இந்நிலையில் டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் முதல் சுற்றில் ஈரானைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஆர்யன் கோலமியை எதிர்கொண்டார் குகேஷ். கிளாசிகல் முறையில் நடைபெற்ற ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய குகேஷ் 51-வது நகர்த்தலின் முடிவில் வெற்றியடைந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT