செய்திகள்

பீனிக்ஸ் பிரக்ஞானந்தா: 3-வது சுற்றில் அட்டகாச வெற்றி

கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை 2.5-1.5 என வீழ்த்தினார்.

3-வது சுற்றில் அமெரிக்காவின் பிரபல வீரரான ஹான்ஸ் நீமன்னை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. கார்ல்சனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று பிறகு தோற்ற நீமன், பிரக்ஞானந்தாவுக்கு எதிராகவும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சமன் செய்தார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. 4-வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று  2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

உலக சாம்பியன் கார்ல்சன்  2.5-1.5 என பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை வீழ்த்தினார்.

8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் 9 புள்ளிகளுடன் கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 4-வது சுற்றில் லெவோன் ஆரோனியனை அவர் எதிர்கொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT