செய்திகள்

ஆசியக் கோப்பை டி20: பிரபல இலங்கை வீரர் விலகல்

ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார்.

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன

காயம் காரணமாக பிரபல வேகப்பந்து வீச்சாளர்களான பும்ராவும் ஷாஹீன் அப்ரிடியும் ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இந்நிலையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு காயம் ஏற்பட்டதால் உடனடியாக குணமாகி விளையாட முடியாது என்கிற சூழலில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். இதையடுத்து இலங்கை அணியில் நுவன் துஷாரா சேர்க்கப்பட்டுள்ளார். 30 வயது சமீரா, இலங்கை அணிக்காக 2015 முதல் 12 டெஸ்டுகள், 42 ஒருநாள், 59 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆகஸ்ட் 27 அன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் துபையில் மோதவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT