செய்திகள்

கேப்டன் பதவியிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கமா?: பஞ்சாப் கிங்ஸ் அணி விளக்கம்!

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை மாற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து அந்த அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

2021-ல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் இந்த வருடம் லக்னெள அணியில் இடம்பெற்று அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் தேர்வானார். 2018 முதல் அந்த அணியில் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார்.

எனினும் 2022 ஐபிஎல் போட்டியிலும் பஞ்சாப் அணி லீக் சுற்றின் முடிவில் 6-ம் இடத்தையே பிடித்தது. 2019, 2020, 2021, 2022 என கடந்த நான்கு ஆண்டுகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 6-ம் இடத்டையே பிடித்தது. ஐபிஎல் போட்டியில் இருமுறை மட்டுமே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.  

இதையடுத்து பயிற்சியாளர் கும்ப்ளேவை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பஞ்சாப் அணி நிர்வாகம் உள்ளதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அடுத்ததாக, இந்த வருடம் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வாலையும் நீக்கிவிட்டு ஜானி பேர்ஸ்டோவைப் புதிய கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் செய்தி வெளியானது. இதையடுத்து இந்த சர்ச்சை குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஒரு விளையாட்டு இணையத்தளத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி குறித்து செய்தி வெளியாகியுள்ளது. எங்கள் அணியைச் சேர்ந்த எந்தவொரு நிர்வாகியும் யாருக்கும் இதுகுறித்து பேட்டியளிக்கவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணி தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT