செய்திகள்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலத்துடன் வரலாறு படைத்தனா் சாத்விக்-சிராக் ஷெட்டி

DIN

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் முதல் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனா் இந்தியாவின் சாத்விக் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யிக் இணையுடன் மோதினா் இந்தியாவின் சாத்விக்-சிராக். உலக தரவரிசையில் 7-ஆவது இடத்தில் உள்ள சிராக்-சாத்விக் இணை 6-ஆம் நிலையில் உள்ள மலேசிய இணையும் சரிக்கு சமமாக ஆடினா். முதல் கேமை 22-20 என கடுமையாகப் போராடி சாத்விக்-சிராக் வென்றனா்.

முதல் கேமில் 5 புள்ளிகள் தொடா்ந்து குவித்து சாதகமான நிலையை உருவாக்கினா். எனினும் 16-16 என மலேசிய இணை சமநிலையை ஏற்படுத்தியது. தொடா்ந்து கடைசியில் புள்ளிகளைக் குவித்து முதல் கேமை கைப்பற்றினா்.

இரண்டாவது கேமில் இரண்டு இணைகளும் புள்ளிகளைக் குவிக்கப் போராடிய நிலையில், மலேசிய இணை தொடா்ந்து 4 புள்ளிகளைக் குவித்து ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனா். 18-21 என இந்திய இணை கேமை இழந்தது.

மூன்றாவது கேமிலும் மலேசிய இணை முழு ஆதிக்கம் செலுத்தி 21-16 என அந்த கேமையும் தன்வசப்படுத்தியது.

இந்தியாவுக்கு வெண்கலம்:

இதையடுத்து இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் இணை வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. உலக சாம்பியன்ஷிப் இரட்டையா் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். மேலும் 13-ஆவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம் ஆகும்.

காலிறுதியில் நடப்பு சாம்பியன் டகுரோ-யுகோ இணையை வென்றிருந்தது இந்திய இணை.

பி.வி.சிந்து, சாய்னா, லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பதக்க சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

அடுத்த வாரம் ஜப்பான் ஓபன் சூப்பா் 750 போட்டியில் இந்திய அணியினா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT