செய்திகள்

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா முன்னிலை

22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

DIN

22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 78 இந்திய வீரர்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி போன்ற பிரபல இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். துபை ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 23 வீரர்களுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். 

துபை ஓபன் செஸ் போட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

SCROLL FOR NEXT